வேம்பு அதாவது வேப்பமரம்
இதன் தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா (Azadirachta indica)என்பதாகும். இதன் தாவரக்குடும்பம் மீலியேசி (Meliaceae). வேப்ப மரம் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி இதனை ஒரு மூலிகை தாவரம் என்றும் கூறலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடாத தன்மை கொண்டது என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூவிலிருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் போன்றவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மிகுந்த மருத்துவ குணமுடையது.
வளரியல்பு :
இந்தியா முழுவதும் பரவி காணப்படும். ஜூன் – ஜூலையில் கனிகள் உருவாகும். மார்ச்சு – ஏப்ரலில் பூக்கள் பூக்கும். பல்லாண்டு வாழும் மரம் இது.கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது.
பயன்கள் :
இதன் எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலை முக்கியமாகக் கொசு விரட்டியாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சுக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலையை அரைத்துக் களிம்பாக்கிப் புண்களை ஆற்றவும், கட்டி வீக்கங்களைக் கரைக்கவும் வைத்துக் கட்டுவார்கள். பட்டை ஜுரத்தைப் போக்கவும் பயன்படுகிறது. எண்ணெய் மூலம், பலவீனம், கருத்தடை, தோல்நோய்கள், குஷ்டம், மூட்டுவலி, பொடுகு, புண், அம்மை, புற்றுநோய், பாம்புக்கடி ஆகிய பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது.

No comments:
Post a Comment