கங்கை நீர் முதலை (Gharial)
********************************************************************************
சிந்து கங்கை பிரம்மபுத்திரா மற்றும் மகா நதிகளில் உள்ளன. இவற்றை ஆங்கிலத்தில் கரியால் (Gharial) என்று அழைப்பர். ஆண் முதலைகளுக்கு மூக்கின் நுனி பானை போன்று அமைந்திருப்பதால் இப்பெயர் உண்டாயிற்று.
ஒரு காலத்தில் இவை எங்கும் காணப்பட்டது. வேட்டையாடலால் இவை குறைவுற்று
மேற்குறிப்பிட்ட நதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவை நீரில் நன்றாக
வேகமாக நீந்தக்கூடியவை. நிலத்தில் இவற்றின் செயல்திறன் குறைவு.
வயதான முதலைகள் சூரிய ஒளியில் குளிர்காயும். இவற்றின் பிரதான உணவு மீன்.
பெண் முதலைகள் கரைகளின் ஓரத்தில் ஆழத்தில் 40 முட்டைகள் வரையிடும். இவை
குட்டிகளை நன்றாக பாதுகாக்கும். 13 அல்லது 14 வயதில் முதிர்ச்சியடையும்.
டிசம்பர், ஜனவரியில் இனப்பெருக்கம் செய்யும். மணற்பரப்பில் கூடமைத்து
முட்டைகளிட்டு 32 - 34 டிகிரி வெப்பநிலையில் அடைகாக்கும்.

No comments:
Post a Comment